மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 143 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்க கொடிசியா என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழிலார்கள் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து பேசிய கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, கோவையைச் சேர்ந்த சிறு குறு நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் முதற்கட்டமாக 127 ராணுவ உதிரி பாகங்களை பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் காட்டியுள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்கு இந்த உதிரி பாகங்களை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் எனவும் கூறினார்.