நெல்லையில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணையில் இருந்த நபர் திடீரென உயிரிழந்த நிலையில் இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் சுலைமான் என்பவர் திருட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், வாகனத்தின் உரிமையாளர் சுலைமானை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு வழக்கு குறித்து போலீசார் விசாரிக்கும் போது சுலைமான் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதித்த போது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.