இன்று நடைபெறும் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பா.ஜ.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 2010ஆம் ஆண்டு, மத்திய இணை அமைச்சராக தி.மு.க.வின் காந்திச்செல்வன் இருந்தபோது தான் நீட் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதாவும், நீட் விவகாரத்தில் கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்துள்ளதாகவும், சமூக நீதி ஒருபோதும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய போது ஆளுநர் வழங்கிய விளக்க கடிதத்தை வெளியிட வேண்டுமென அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.