கடலூர் மாவட்டம் புவனகிரியில் இனிப்பகம் ஒன்றில் இனிப்பு வாங்கிக் கொண்டிருந்த திமுக நிர்வாகி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
புவனகிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கடையில் இனிப்பு வாங்கிக்கொண்டிருந்த திமுக நிர்வாகியான ராஜா என்பவர், கடைக்காரரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென தலை வலி ஏற்பட்டவர் போல், தலையைப் பிடித்துக் கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். சில விநாடிகள் சுய நினைவுடன் சுற்றும் முற்றும் பார்த்த அவர், பின்னர் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மருத்துவமனையில் ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.