நாகையில் உயிருடன் இருக்கும் வாக்காளரின் பெயரை நீக்கல் பட்டியலில் சேர்த்த அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகை நகராட்சி 4,வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமிர்தவல்லி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து கடந்த மாதம் 5ஆம் தேதி நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வாக்காளர் பட்டியல் சர்பார்ப்பு அலுவலர் அமுதா என்பவரின் தவறு என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அமிர்தவல்லியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.