கொடைக்கானல் அருகே வனத்துறையால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மாயமான இளைஞரை, தேடும் பணி மூன்றாம் நாளாக இன்றும் தொடருகிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த 8 இளைஞர்கள், கடந்த 2ஆம் தேதி தடையை மீறி ரெட்ராக் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு, அங்கிருந்த பாறையின் விளிம்பு பகுதியில் நின்று செல்பி எடுக்க முயன்றனர்.
அப்போது, ராம் குமார் என்ற இளைஞர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில், நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்ததில் சுமார் 1000 அடி தூரம் வரை இளைஞரின் உடல் தென்படாத நிலையில், மூன்றாம் நாளாக இளைஞரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.