தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, சிறை அதிகாரி ஒருவர் மதனின் மனைவியிடம் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சிறையில் படுக்கை, உணவு உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்து தர, அங்குள்ள அதிகாரி மதனின் மனைவி கிருத்திகாவிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், முதற்கட்டமாக, 25ஆயிரம் ரூபாய் தொகையை மதனின் மனைவி கிருத்திகா, முகில் செல்வம் என்ற கூகுல் பே ஐ.டி.க்கு அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆடியோவின் உண்மைத் தனமை குறித்து விசாரணை நடத்தி வரும் சிறைத்துறை அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.