விழுப்புரத்தில் உள்ள யா-முஹைய்யதீன் பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தயார் செய்த ஊசிப்போன பிரியாணியை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அசைவ உணவகங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை -திருச்சி சாலையில் உள்ள யா-முஹைய்யதீன் பிரியாணி கடை உட்பட அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ பிளாஸ்டிக் பைகள், செயற்கை சாயம் ஏற்றப்பட்ட 5 கிலோ கோழி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, தரமற்ற முறையில் உணவு தயாரித்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.