பெண்ணாடத்தில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்க்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வயல்வெளியில், நீரின்றி இருந்த 30 அடி ஆழம் கொண்ட தரைகிணற்றில் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பழனிவேல் என்பவர் கிணற்றிலிருந்து பெண் குரல் கேட்டதை அறிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.