சென்னை வண்டலூரில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த அண்ணா உயிரியல் பூங்கா நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து, 2 மீட்டர் தூர தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் உயிரியல் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு இடங்களில் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.