தமிழகத்தில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. சுமார் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டதோடு, முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர்.
சுழற்சி முறையில் அல்லாமல் 100சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படுகின்றன. தகுதியுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பாடங்களை முழுவீச்சில் விரைந்து நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டன. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.