ஆன்லைனில் ப்ரீ-பயர், ரம்மி போன்ற விபரீத விளையாட்டுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
ஒட்டப்பிடாரம், பசுவந்தனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களை அறியாமல் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் மூழ்கி படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், வாலிபர்கள் உட்பட பலர் ஆன்லைன் ரம்மியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வருவதாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது கவனம் செலுத்தி இதுபோன்ற விளையாட்டுக்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.