திருப்பூரில் இரவு நேரத்தில் தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
முருகம்பாளையம், பாறைக்காட்டை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகே துவைக்கும் கல்லில் அமர்ந்து, நேற்று முன்தினம் இரவு சத்தம் போட்டு பப்ஜி’ விளையாடி உள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் சத்தம் போடுவதால் தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
அப்போது இருதரப்புக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, கார்த்திக்கை வெட்டினார்.