நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பேருந்து நிலையக் கழிவறை வாசலில் பை ஒன்று இருப்பதைக் கண்ட ஐயப்பன் என்பவர் அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே அரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 4 சுவாமி சிலைகளும், ஒரு கத்தியும் இருந்துள்ளன. அந்த பையை அவர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார்.
சிலைகளை கழிவறை அருகே வைத்து சென்றது யார் ? அவை ஏதேனும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.