கரூரில் திமுக காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூட்டத்தைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கரூர் மாவட்ட திமுக தலைமையகத்தில் நடந்த ஆலோசனையில் திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் சார்பில் எம்.பி.ஜோதிமணியும் பங்கேற்றனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிலர் எம்.பி. ஜோதிமணியை ஒருமையில் பேசி வெளியேறச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த எம்.பி.ஜோதிமணி, கூச்சலிட்டவாறே அங்கிருந்து வெளியேறினார்.
எம்.பி.யை சமாதானம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினர், அவரை கையை பிடித்து இழுத்து வந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.