சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.