தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதம் மாற வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி வலியுறுத்தி வந்த நிலையில், மாணவியின் தந்தை சார்பிலும் அதே கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, பள்ளி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாணவி தற்கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.