மதுரை சோழவந்தான் அருகே இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி மருத்துவ சீட்டு வாங்கிய அரசு பள்ளி மாணவி பொருளாதார உதவி செய்திட கோரிக்கை விடுத்துள்ளார்.
பானா மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கபேச்சி என்ற அந்த மாணவி 3 சகோதரிகளுக்கு மூத்தவராகப் பிறந்தவர். தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 150 மதிப்பெண்களுடன் வென்று, சீட் கிடைத்தும் போதிய பணம் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை.
இந்த ஆண்டு நீட்டில் வெல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் நீட் தேர்வு எழுதி, 250 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார். கன்னியாகுமரியிலுள்ள கல்லூரி ஒன்றில் மருத்துவ இடம் கிடைத்துள்ள நிலையில், இதர செலவுகளுக்கு என்ன செய்வது எனத் தவித்து வருவதாகக் கூறுகிறார்.