ஈரோடு அருகே கொத்து பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லரசம்பட்டி நால்ரோட்டில் ஈஸ்வரன் என்பவர் ஐயன் மெஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி உணவகத்திற்கு வந்த ஆசிக், ரசூல் என்ற இருவர் மதுபோதையில் கொத்து பரோட்டா கேட்டுள்ளனர்.
தோசை மட்டுமே இருப்பதாக ஈஸ்வரன் கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவர்களது சகோதரர்களான உமர் பாரூக், கார்த்திக் என இருவரை போன் செய்து வரவழைத்துள்ளனர். அவர்கள் இருவரும் நாற்காலியை எடுத்து ஈஸ்வரனைத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த 4 பேரில் உமர்பாரூக் ஆயுதப்படை காவலர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.