மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பிப்ரவரி 1-ம் தேதி இரவு 12 மணி வரை, tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை, அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
அப்போது, அதற்கான மையங்களுக்கு மாணவர்கள் நேரில் செல்ல வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று முடிவுகள், பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகும். இதையடுத்து, பிப்ரவரி 17-ம் தேதி முதல் 22-ம் தேதி மாலை 3 மணிக்குள், கல்லூரிக்கு சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம்.