திருச்சி அரியமங்கலத்தில் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நபரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அங்குள்ள அடர்ந்த முள்காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்குவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜேஸ்வரி என்ற பெண் தனது கணவரை காணவில்லை என புகாரளித்திருந்த நிலையில், அவரை அழைத்து சடலத்தைக் காண்பித்து அது அவருடைய கணவர் மணிகண்டன் தான் என உறுதி செய்தனர்.
கடந்த மாதம் காவலர் ஒருவர் முன்பகை காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது கணவரை தாக்கியதாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் ராஜேஸ்வரி கூறியதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.