தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் சவாலாக உள்ளது என்ற அவர், சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்றும் கூறினார்.
புதுவகையான கொரோனா பரவி வருகிறது என சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்ப வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.