கோவை மாவட்டம் துடியலூர் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற கொடிய விஷம்கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை, ஒரு நபர் பேசியே திருப்பிய அனுப்பியதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை, கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது வீட்டினுள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஊர்ந்து செல்ல முயன்றுள்ளது.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தெறித்து ஓட, கனகராஜ் பயப்படாமல் உள்ளே வரக்கூடாது என அந்த பாம்புக்கு கட்டளையிடுகிறார். பாம்பிற்கு காது கேட்காது என்றாலும் அவர் சொன்னவுடன் பாம்பு திரும்பிச் சென்றதை அக்கம் பக்கத்தினர் வியந்து பார்த்தனர்.
அங்கிருந்து சென்ற அந்த பாம்பு அருகில் புதிதாக வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் விழுந்துவிட்டது. தகவல் அறிந்துவந்த வனத்துறை ஊழியர், குழிக்குள் இறங்கி சாக்குப்பையில் பாம்பை லாவகமாக பிடித்து அதனை வனப்பகுதியில் விட்டார்.