கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், போலீசார், அவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால் பகுதிகளில் அடுத்தடுத்து 4 சிறிய கோவில்களை சேதப்படுத்திய விவகாரத்தில் சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவனை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒன்றரை ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்த கஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், கடந்த 27ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு சிறை கைதிகளுக்கான வார்டில் இருந்து கஜேந்திரன் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.