காரைக்கால் அருகே கடலில் இருந்து துறைமுகத்திற்கு திரும்பிய விசைப்படகு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த கலைமைந்தன் என்பவர் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று, கடல் சீற்றம் காரணமாக மீண்டும் துறைமுகம் திரும்பியுள்ளார்.
படகில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில், திடீரென படகின் ஒரு பகுதி மலமலவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் படகிலிருந்த வலைகள், டீசல் அடங்கிய கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.