ஆண்டிப்பட்டி - தேனி இடையே இரண்டாம் முறையாக அதிவேக ரயில் இன்ஜின் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மதுரை முதல் போடிநாயக்கனூர் வரை சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேஜ்பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயில் இஞ்சின் 12 நிமிடங்களில் தேனி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.