நுகர்வோரே மின்சாரக் கட்டணத்தை கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில், மின் கட்டண ரசீது குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
முதல்கட்டமாக வரும் 1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில், மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, சோதனை செய்யப்பட உள்ளது. இந்த செயலியின் சாதக, பாதகங்களை, நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமையகத்துக்கு விவரங்களை அனுப்ப ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.