தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 130 கோவில்கள் இடிக்கப்பட்டது என அவதூறு கருத்து பதிவிட்டதாக தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொய்யான தகவலை, வதந்தியை பரப்பியதாக கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதரீதியான மோதலை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டது, கலவரத்தை தூண்டிவிடுவது, பொய்யான தகவல் மூலம் மக்களிடையே பதற்றத்தை உருவாக்குவது, மற்றும் இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் நோக்கில் செயல்படுவது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.