சென்னை கொரட்டூரில் வீட்டில் இருந்த டிஜிட்டல் லாக்கரை உடைத்து 43 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த வேலைக்கார பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்த சந்திரசேகர் என்பவரின் வீட்டில், திருவண்ணாமலையை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கி வேலைகளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சந்திரசேகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் வேலை பார்த்து வந்த இரு தம்பதியினர் நகைகளை திருடியது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், 27 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.