திருச்சி லலிதா ஜுவல்லரியில் திருட்டு, குருவித்துறை குரு பகவான் கோவில் சிலை திருட்டு என பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கணேசன் என்பவனை 47 சவரன் நகை திருடிய வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இரவில் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 47 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
இது தொடர்பாக பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள குருவித்துறையை சேர்ந்த கணேசன் என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடம் இருந்து 40 சவரன் நகை மீட்கப்பட்டது.