நிர்வாகத்திலும் பெண்கள் சரிபாதியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.