திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 2 பெண் குழந்தைகளுக்குத் தாயான தனலட்சுமிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் திட்டியதாகக் கூறப்படும் நிலையில், மனமுடைந்த தனலட்சுமி மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று தனது பெண் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார்.
வீடு திரும்பிய தனலட்சுமியை தாய் பாசம் வாட்டி வதைத்தால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று குழந்தையைத் தேடியுள்ளார். இதற்கிடையே அங்கிருந்த கட்டிட தொழிலாளர்களால் மீட்கப்பட்ட அந்தக் குழந்தை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து செய்திதாள்களில் படித்த தனலட்சுமி தன் குழந்தைக்கு இப்படி ஒரு நிலையா எனப் பதறி, கண் கலங்கியபடி காவல் நிலையம் வந்துள்ளார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.