பொங்கல் பரிசுப் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட புகாரில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களில் பொங்கல் பரிசுப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சில இடங்களில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.