நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்களைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வேட்பாளர்களிடம் இருந்து புகார்களைப் பெற மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் புகார் மையம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் என்றும், பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைக் கட்டணமில்லாத் தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம் (1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074) என அறிவிக்கப்பட்டுள்ளது.