சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது சிலர் எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததோடு, அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல அதிகாரி எஸ்.எம்.என்.சுவாமி நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.