தமிழ்நாட்டில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடையவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த மாத கணக்கெடுப் பின்படி 10 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 600 இடங்களில் இன்று முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 160 நகர்ப்புற சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.