தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்திற்கும், மகாகவி பாரதியார் விருது, பாரதி கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்படுகிறது.
சிங்காரவேலர் விருது மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், கம்பர் விருது - பாரதி பாஸ்கருக்கும், மறைமலையடிகள் விருது - சு.கி.சிவத்திற்கும், இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.