வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 28-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 29,30 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 28-ந் தேதியும், 29-ந் தேதியும் மேற்குறிப்பிட்ட கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.