விக்கிரவாண்டி அருகே தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு விற்ற மேலும் 5 தனியார் உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை விதித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில், சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த 5 உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டதுடன்,அங்கு அரசு பேருந்துகளை நிறுத்துவதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.