தஞ்சையில் எம்.ஜி.ஆர் சிலையை அப்புறப்படுத்தியதாகக் கூறி சேகர் என்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மார்பளவு எம்.ஜி.ஆர் சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு அதே பகுதியில் வேறொரு இடத்தில் வீசப்பட்டிருந்தது.
மேற்கு காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சந்தேகத்துக்கிடமாக அப்பகுதியில் நடமாடிக் கொண்டு இருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்கிற அந்தோணி என்பதும் குடிபோதையில் எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து எடுத்து சென்று வீசி சென்றதும் தெரியவந்தது.