டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்களை திருப்பிக் கொடுக்கும் வசதியை செயல்படுத்த வேண்டும் என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூரில் கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மது அருந்திவிட்டு பலர் பாட்டில்களை வயல்களில் உடைத்துவிட்டு செல்வதால், விவசாயிகள் வயலுக்குள் இறங்க முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்ட ஈஸ்வரன், இதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில், அல்லது காலி பாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் அதற்குரிய தொகையை கழித்துக் கொள்வது, என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கரூரில் புதிதாக அமைக்கப்படும் அரசு வேளாண் கல்லூரிக்கு, தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என்றும், ஈஸ்வரன் வலியுறுத்தினார்.