உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 1.64 கோடி ரூபாய் நகைக்கடன் மோசடி செய்த புகாரில், வங்கியின் செயலாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு நகைக்கடன் வழங்கியதாக, வங்கிச் செயலாளர் கலைச்செல்வி, கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.