ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்டத்திலுள்ள விதிகள், சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய காவல் ஆணையத்தின் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.