திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய்க்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக பயணி ஒருவர் உரிய ஆவணங்களின்றி இந்திய மதிப்பில் 13 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை வைத்திருந்ததை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.