திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தன்னந்தனியாக சாலையோரம் போட்டுவிட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடில் பகுதியில் நேற்றிரவு சாலையோரமாக கிடந்த பச்சிளம்குழந்தை வீரிட்டு அழுதுகொண்டிருந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்து குழந்தையை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, குழந்தையை படுக்கைக்குள் வைத்து சாலையோரமாக போட்டுச்சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.