கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதல் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
புதுபிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் - எஸ்டர் சந்தியா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாளாத நிலையில் இருந்து வந்த மோகன்ராஜ் கடந்த 20ந்தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.