கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து ஒன்று, சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியனில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்றுக் காலை பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஜமீன் காளியபுரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து சென்டர் மீடியனுக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மீடியனில் இருந்த செடிகளை சேதப்படுத்தியவாறு பேருந்தை ஓட்டுநர் இயக்கியிருக்கிறார். இதனை, பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.