அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அகில இந்திய ஆட்சிப் பணிப் பணிகள் விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் பணிக்கு மாற்ற முடியும் என்ற நிலை, அலுவலர்களிடையே பணியார்வத்தை குறைக்கும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.