பெங்களூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கண்டெய்னர் லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா-வை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரிலிருந்து காஞ்சிபுரத்துக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தாமரை தாங்கல் பகுதியில் இருந்த கண்டெய்னர் லாரியை சோதனை மேற்கொண்டதில், பர்னிச்சர்களுக்கு நடுவே 120 மூட்டைகளில் குட்கா-வை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், கண்டெய்னர் லாரி மற்றும் 2 மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.