உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கோவை - அவினாசி சாலை சந்திப்பில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை அகற்ற கோரி, லோகநாதன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய, தலைமைச் செயலாளருக்கு, கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தலைமைச் செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.